கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மேலும் 16 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 354 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-17 22:00 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 338 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 140 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் கள்ளக்குறிச்சி காந்திரோடு, அண்ணாநகர் , சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், எலவனாசூர்கோட்டை, உளூந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 338-ல் இருந்து 354 ஆக உயர்ந்துள்ளது. இதில் 268 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த சில இடங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கும் கொரோனா தொற்று பரவி விடுமோ? என்று அச்சத்தில் உள்ளனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்