மராட்டியத்தில் மேலும் 3,300 பேருக்கு தொற்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரமாக உயர்வு - இதுவரை 59,166 பேர் குணமடைந்தனர்

மராட்டியத்தில் மேலும் 3 ஆயிரத்து 307 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 பேராக உயர்ந்து உள்ளது. இதுவரை 59 ஆயிரத்து 166 பேர் குணமடைந்தனர்.

Update: 2020-06-17 22:30 GMT
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், நோய் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குறிப்பாக மும்பையை நோய் தொற்று புரட்டி போட்டு உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 307 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 ஆக அதிகரித்து உள்ளது.

இதே போல மாநிலத்தில் மேலும் 114 பேர் பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் ஆட்கொல்லி நோய்க்கு 5 ஆயிரத்து 651 பேர் உயிரிழந்து உள்ளனர். 51 ஆயிரத்து 921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 59 ஆயிரத்து 166 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமானவர்கள் சதவீதம் 50.68 சதவீதமாகி உள்ளது. இறப்பு சதவீதம் 4.84 ஆகும்.

மும்பையில் நேற்று புதிதாக 1,359 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 587 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் 77 பேர் பலியானார்கள். இதுவரை மும்பையில் 3 ஆயிரத்து 244 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 6,540 (213 பேர் பலி), தானே புறநகர் - 2,095 (41), நவிமும்பை மாநகராட்சி - 5,036 (151), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 3,029 (77), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 830 (37), பிவண்டி மாநகராட்சி - 728 (24), மிரா பயந்தர் மாநகராட்சி - 1,909 (99), வசாய் விரார் மாநகராட்சி - 2,218 (66), ராய்காட் - 962 (34),

பன்வெல் மாநகராட்சி - 1,105 (52). மாலேகாவ் மாநகராட்சி - 907 (81). ஜல்காவ் - 1,522 (149), புனே மாநகராட்சி - 11,121 (545), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 1,188 (32), சோலாப்பூர் மாநகராட்சி - 1,828 (131), அவுரங்காபாத் மாநகராட்சி - 2,745 (136), நாக்பூர் மாநகராட்சி - 1,019 (12).

மேலும் செய்திகள்