பெரிய மார்க்கெட்டில் இயங்கிவரும் 130 சிறு காய்கறி கடைகள் இன்று முதல் பழைய சிறைச்சாலைக்கு மாற்றம்
புதுவை பெரிய மார்க்கெட்டில் உள்ள 130 சிறு காய்கறி கடைகள் இன்று முதல் பழைய சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பெரியமார்க்கெட்டில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், அங்கிருந்த காய்கறி கடைகள் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 5-ம் கட்ட ஊரடங்கின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதைடுத்து காய்கறி கடைகள் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கு ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன.
இந்தநிலையில் ஏ.எப்.டி. மைதானத்துக்கு கடைகளை மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதை வியாபாரிகள் ஏற்க மறுத்தனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்வோம். பொதுமக்களிடமும் இதுகுறித்து அறிவுறுத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. தலைமையில் பெரிய மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது வியாபாரிகள், தற்போது தினமும் 500 முதல் 1000 பேர் வரை தான் மார்க்கெட்டுக்கு வருகின்றனர். அப்படி இருக்கும் போது காய்கறி கடைகளை மாற்றினால் பாதிப்பு ஏற்படும். எனவே அந்த முடிவை கைவிட வேண்டும். கிருமி நாசினி வைத்து கைகளை சுத்தம் செய்வதுடன் முகக் கவசம் அணிந்து வருமாறு பொதுமக்களை வலியுறுத்துவோம். சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரத்தில் ஈடுபடுவோம் என்று உறுதி அளித்தனர்.
இதற்கு பதில் அளித்த நாராயணசாமி, பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம். இருந்தாலும் அங்குள்ள இடநெருக்கடியை சமாளிக்க நுழைவுவாயில் பகுதிகளில் உள்ள சிறு கடைகளை பழைய சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றுவோம். மார்க்கெட்தொடர்ந்து ஒருவாரம் கண்காணிக்கப்படும். அப்போது விதிமுறைகள் பின்பற்றப்படாதது தெரியவந்தால் காய்கறி கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பெரிய மார்க்கெட், பழைய சிறைச்சாலை வளாகம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். பெரிய மார்க்கெட் நடைபாதை மற்றும் நுழைவுவாயிலில் உள்ள 130 காய்கறி கடைகள் மற்றும் சிறிய கடைகள் பழைய சிறைச்சாலைக்கு இன்று (புதன்கிழமை) முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பழைய சிறைச்சாலை வளாகத்தில் சிறுகடைகள் மாற்றப்படுவதையொட்டி அங்கு முன் ஏற்பாடாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கட்டம் வரையப்பட்டுள்ளது. மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.