லாரி டிரைவர் கொலை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

லாரி டிரைவர் கொலை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-17 00:26 GMT
ஜீயபுரம்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள மேல் நங்கவரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 27). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெருகமணி கடைவீதியில் நடந்து சென்ற போது அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக 5 பேரை ஜீயபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சக்தி(21), சதீஷ்(27), அஜீத் குமார்(26), பெருகமணியை சேர்ந்த சிவசோழன்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சிவசோழன் சட்டக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்