வந்தவாசி அருகே பயங்கரம்: வியாபாரி கழுத்தை நெரித்து கொலை 37 ஆடுகளையும் திருடிச்சென்றனர்
வந்தவாசி அருகே ஆட்டு வியாபாரியை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு 37 ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி அருகே உள்ள ஆளியூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70). இவர், தனது நிலத்தில் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேல் ஆடுகளை நிலத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வடிவேலுவை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 37 ஆடுகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கராமன், வடவணக்கம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரியை கொலை செய்து ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வடிவேலுக்கு பூங்காவனம் என்ற மனைவியும், குமார், பாபு என்ற 2 மகன்களும், ரத்தினம் என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.