மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 59 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 59 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் பல்வேறு விதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்த வைரஸ் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கில் சில தளர்வு ஏற்படுத்தியவுடன் இதன் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விதிமுறைகளை விதித்த அரசு அதை வியாபாரிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என கூறியது. ஆனால் அதை யாரும் முழுமையாக கடைபிடிக்கவில்லை.
திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகம் மற்றும் நகைக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும், கடைகளில் மக்கள் கூட்டமாக நிற்பதாகவும், முகக்கவசம் யாரும் அணிவதில்லை என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு புகார்கள் சென்றது. இதனால் கொரோனா பரவல் அதிகமாக கூடும் என்பதால் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவரது தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையாளர் நவேந்திரன், அதிகாரிகள் நேற்று நகரின் பல இடங்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அசலியம்மன் கோவில் தெரு, தேரடி தெருவில் உள்ள 3 நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. இதனால் அந்த கடைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதேபோல தேரடி வீதியில் கோவில் எதிரே உள்ள தனியார் வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அங்கு பணியாற்றுபவர்கள் முகக்கவசங்களும் அணியவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வணிக வளாகத்தில் செல்போன் கடைகள், பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள் தான் பெரும்பாலும் உள்ளது. இதையடுத்து அங்குள்ள 20 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
நகரின் முக்கிய பகுதி என்பதால் அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாலும், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதாலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா, தாசில்தார் நடராஜன் ஆகியோர் தலைமையில் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் போலீசார் தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் தண்டராம்பட்டில் 8 கடைகளுக்கும், தானிப்பாடியில் 8 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 59 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.