வங்கி, நிறுவனங்கள் மீது நடவடிக்கைக்கோரி மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை போராட்டம்
வங்கி, நிறுவனங்கள் மீது நடவடிக்கைக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று சோமரசம்பேட்டை, அல்லித்துறை, மல்லியம்பத்து, கோப்பு மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், சமூக நீதிப் பேரவையின் மாவட்ட செயலாளர் ரவிகுமார், துணைத்தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
கொரோனா தொற்று நடவடிக்கை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதால், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலக வரவேற்பு அறையில் உள்ள புகார் பெட்டியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கோரிக்கை மனுவுடன் வந்த மகளிரை உள்ளே விடாமல் போலீசார் தடுத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கை அட்டைகளை கையில் பிடித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தள்ளுபடி செய்ய வேண்டும்
அப்போது மகளிர் குழுவினர் கூறுகையில், ‘ஊரடங்கு காலத்தில் வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணை தொகையை ஆகஸ்டு மாதம்வரை கட்ட சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஆனால், மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடனுக்கு அந்த உத்தரவு பொருந்தாது என்றும், கடன் தவணையை கட்டச்சொல்லி வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மிரட்டுகின்றன. எனவே, மகளிர் குழுவினர் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்
இதுபோல, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வைரவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய நிர்வாகி மணிகண்டன், கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக முகநூலில் பதிவிட்டிருந்தார். அது கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக கூறி அவர் மீது குளித்தலை போலீசார் பொய்வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விநாயகம், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.