மேற்பனைக்காடு, ஆதனக்கோட்டை பகுதிகளில் வாழை, காய்கறி செடிகளில் பூச்சி தாக்குதல் விவசாயிகள் பாதிப்பு
மேற்பனைக்காடு பகுதியில் வாழையிலும், ஆதனக்கோட்டை பகுதியில் காய்கறி செடிகளிலும் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கீரமங்கலம்,
கீரமங்கலம், மேற்பனைக்காடு, கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளான்விடுதி, கருகாக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் வாழை விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல நூறு டன் வாழைத்தார்கள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வாழைத்தார்கள் அறுவடை செய்யப்படாமல் பழுத்து அழுகியது. பின்னர் ரூ.500-க்கு விற்பனை செய்ய வேண்டிய வாழைத்தார்கள் ரூ.100-க்கும் குறைவாக விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலையில் உள்ளது.
இந்நிலையில் மேற்பனைக்காடு கிராமத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் வாழைகளில் உள்ள இளம் இலைகள் அனைத்தும் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் தார் வருவதில் சிக்கல் ஏற்படுவதுடன், இனிமேல் நல்ல தார்கள் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வாழையில் இதுவரை இல்லாத பூச்சி தாக்குதலாக உள்ளது. சோளப் பயிர்களை அமெரிக்கன் படைப்புழு அழிப்பது போல வாழைகளை ஏதோ பூச்சிகள் கடித்து குதறி அழிக்கிறது. அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியவில்லை. இதனால் அடுத்தடுத்த தோட்டங்களில் பரவி அனைத்து விவசாயிகளின் வாழைகளும் நாசமாகிவிடுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த தோட்டத்தை நேரில் பார்வையிட்டு பூச்சியை அழிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், என்றனர்.
காய்கறி சாகுபடி
இதேபோல் ஆதனக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் காய்கறி சாகுபடியில் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதில் கணபதிபுரம் கிராமத்தில் மலையாண்டி மனைவி ராமாயி(55) என்ற பெண் விவசாயி பயிரிட்டுள்ள கத்தரி தோட்டத்தில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலால், கத்தரி செடிகள் குருத்தில் இருந்து சோர்ந்து கருகி வருகிறது. இதனால் அவர் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தான பஞ்சகவ்யத்தை கைத்தெளிப்பான் மூலம் கத்தரி செடிகளுக்கு அடித்துள்ளார். பூச்சி தாக்கத்தால் காய்ப்புத்திறன் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கார்த்திபிரியாவிடம் கேட்டபோது, விவசாயிகள் பயிர் செய்துள்ள வயல்களில் பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களுடைய ஆலோசனையின் பேரிலேயே மருந்து வாங்கி பயிர்களுக்கு தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும், என்றார்.