கொரோனா பரிசோதனைக்கு மேலும் 81 மருத்துவ குழு ஆம்புலன்சு - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைக்காக கூடுதலாக 81 மருத்துவ குழு ஆம்புலன்சு வாகனங்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதலாக 81 நடமாடும் மருத்துவ குழு வாகனங்களை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக சென்னையில் 9 ஆயிரத்து 646 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக 2 ஆயிரத்து 834 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு, பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது கூடுதலாக 2 ஆயிரம் செவிலியர்கள் தற்காலி கமாக 6 மாத காலத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சீபுரத்துக்கு மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா நோய் பாதித்தவர்களை அழைத்து செல்ல ஏற்கனவே 173 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆம்புலன்ஸ்களை தொடர்பு கொள்ள பிரத்யேக தொலைபேசி எண்ணும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது. தற்போது கூடுதலாக 81 ஆம்புலன்ஸ் மற்றும் அதில் பணிபுரிய தேவையான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மாநகராட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவ குழு, கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் வீட்டு கண்காணிப்பில் இருக்கிறவர்களுக்கு தேவையான, பரிசோதனை சிகிச்சைகள் செய்வார்கள். அரசு டாக்டர்கள் பாதிக்கப்படுவோம் என்று தெரிந்தும் பணியாற்றுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் டாக்டர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், துணை கமிஷனர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.