கண்டாச்சிபுரம், தியாகதுருகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

கண்டாச்சிபுரம், தியாகதுருகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-06-13 22:15 GMT
திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பால் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்ந்து தற்போது அவரது வீடு இருந்த பள்ளிவாசல் வீதி முற்றிலும் தடைசெய்யப்பட்டு, அங்கு கிருமி நாசினி ெ- தளிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை முகையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாம்ராஜ் மேற்பார்வையில் ஊராட்சி செயலாளர் ஆனந்த் தலைமையில் இந்த பணி கிராம துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே பால்காரரிடம் தொடர்பில் இருந்து, பால் வாங்கி சென்றவர்கள் தானாக முன்வந்து தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாறன் தலைமயில் டாக்டர் ஜோஸ்பிரேம்குமார் மற்றும், சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன், அப்பாஸ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு தான் தொற்றின் தீவிரம் எந்த நிலையில் இருக்கும் என்று தெரியவரும் என்பதால் கண்டாச்சிபுரம் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் வசித்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதை பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அலுவலர் அனந்த சைனம், வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார் தலைமையில் டாக்டர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசு, ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அவர்களில் யாருக்கும் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி தென்படுகிறதா என்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்