சென்னையில் இருந்து போலி இ-பாஸ் தயாரித்து குமரிக்கு வந்த 6 பேர் சிக்கினர் டிரைவர் கைது; கார் பறிமுதல்
போலி இ-பாஸ் தயாரித்து சென்னையில் இருந்து குமரிக்கு காரில் வந்த 6 பேர் சிக்கினர். மேலும் டிரைவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
ஆரல்வாய்மொழி,
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி மிரட்டுகிறது. அங்கு நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதனால் சென்னை மக்கள் அச்சத்திலேயே உள்ளனர். எனவே அங்குள்ள மக்கள் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் குமரி மாவட்டத்துக்கும் ஏராளமானோர் தினமும் சென்னையில் இருந்து வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு இ-பாஸ் எடுக்க வேண்டும். இந்த இ-பாஸை காண்பித்தால் தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்குள் நுழைய முடியும் என்ற நடைமுறை உள்ளது. இதில் சிலர் போலி இ-பாஸ் மூலம் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் போலி இ-பாஸ் மூலம் சென்னையில் இருந்து குமரிக்கு காரில் வந்த 6 பேர் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
6 பேர் சிக்கினர்
குமரி மாவட்டத்தில் அவசியமின்றி நுழைபவர்களை தடுக்க ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. மேலும், வெளியூரில் இருந்து வரும் நபர்களை தடுத்து நிறுத்தி அதன் அருகே உள்ள ஒரு கல்லூரியில் சளி மாதிரி எடுக்கும் மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலையில் ஏராளமான கார்கள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் அணிவகுத்தபடி நின்றன. அங்கு துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா பணியில் இருந்தார். போலி இ-பாஸ் மூலம் யாரேனும் வருகிறார்களா? என நேற்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அப்போது, சென்னையில் இருந்து வந்த ஒரு காரில் டிரைவருடன் சேர்த்து 6 பேர் வந்தனர். பின்னர், சோதனைச்சாவடியில் பணியில் இருந்த துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லாவிடம், டிரைவர் இ-பாஸை காண்பித்தார். அந்த இ-பாஸ் உண்மையானதா என கண்டறிய அவர், அதில் இருந்த கியூஆர்கோடை ஸ்கேன் செய்து பார்த்ததில், இ-பாஸ் போலியானது தெரிய வந்தது.
கார் பறிமுதல்; டிரைவர் கைது
இதனையடுத்து நடத்திய விசாரணையில், குமரி மாவட்டம் பொழிக்கரைக்கு சென்னையில் இருந்து 5 பேரை டிரைவர் அழைத்து வந்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அவர் இ-பாஸ் வாங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரிசோதனைக்காக 6 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் பொழிக்கரையை சேர்ந்த 5 பேரை கன்னியாகுமரி முகாமில் தங்க வைத்தனர். பரிசோதனைக்கு பிறகு டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த நபரை சிறையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.