வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு திறன் பயிற்சி கலெக்டர் ஆனந்த் தகவல்

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் ஆனந்த் கூறி உள்ளார்.

Update: 2020-06-13 23:35 GMT
திருவாரூர்,

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுடைய திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியினால் அவர்களது வேலை பெறும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று வழங்கும் சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

தற்போது கொரோனா நோய் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

பயிற்சி

அவர்களது வேலை திறன் மற்றும் முன் அனுபவங்களை கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணி வாய்ப்பினை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படுவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் பயிற்சி பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் “ https://www.tnsk-i-ll.tn.gov.in ” என்ற இணைதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்