பாபநாசம் அருகே, ஓடும் பஸ்சில் டெய்லரிடம் நகை பறித்த வாலிபர் கைது
பாபநாசம் அருகே ஓடும் பஸ்சில் டெய்லரிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
பாபநாசம்,
தஞ்சை மேலஅலங்கம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது62). டெய்லர். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன்
தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு அரசு பஸ்சில் தனது உறவினர் திருமணத்துக்கு சென்றார். பாபநாசம் அருகே திருப்பாலத்துறை என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது சாம்பசிவம் தனது கையில் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ் முழுவதும் தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை. இதனால் பஸ்சில் இருந்து இறங்கிய அவர் பஸ்சில் நகை திருட்டுப்போனது குறித்து பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
இந்தநிலையில் பாபநாசம் மதுக்கடை அருகே நேற்றுமுன்தினம் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாபநாசம் அருகே தட்டுமால்படுகை புதுத்தெருவைச் சேர்ந்த சுசிமன்(35) என்றும் அவர் டெய்லர் சாம்பசிவம் கையில் அணிந்திருந்த சங்கிலியை பஸ்சில் வைத்து பறித்து சென்றதையும் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுசிமன் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பட்டுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.