புதுச்சேரி நகர பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு இரவு 9 மணிக்கு மேல் திறந்து இருந்த 10 கடைகளுக்கு ‘சீல்’
புதுச்சேரி நகர பகுதியில் நேற்று இரவு கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரவு 9 மணிக்கு மேல் திறந்திருந்த 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 5-ம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதை மீறி சில கடைகள், ஓட்டல்கள் அதிக நேரம் திறந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து புதுவை மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு 9 மணிக்கு மேல் நகர பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலை, நேரு வீதி, அண்ணா சாலை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, மரப்பாலம், 100 அடி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு காரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், கடைகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள். கடைகள் இனி திறந்திருந்தால் அபராதம் மற்றும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்து உடனடியாக கடைகளை அடைக்கவும் உத்தரவிட்டனர்.
இதேபோல் நகரில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து அவர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரவு 9 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் எந்த கடைகளும் திறந்திருக்கக் கூடாது. அதேபோல் பொதுமக்களும் வெளியே நடமாட அனுமதியில்லை. ஆனால் பெரும்பாலானோர் அரசின் உத்தரவை கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடமாடி வருகிறார்கள். இரவு 9 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைத்துள்ளனர். எனவே நான், போலீஸ் அதிகாரிகள், வருவாய், உள்ளாட்சி, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது 9 மணிக்கு மேல் திறக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தினமும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.