கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்

கோவில்களை திறக்க வலியுறுத்தி நெல்லை டவுனில் இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.;

Update: 2020-06-13 06:39 GMT
நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் தற்போது தளர்வு செய்யப்பட்டாலும் கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

கோவில்களை திறக்க வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும், பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு முழங்கால் போட்டு சூடம் ஏற்றி வைத்து போராட்டம் நடத்தினர். இந்து மக்கள் கட்சி தென் மண்டல தலைவி காந்திமதி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவி லட்சுமி, தென் மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாநில துணை செயலாளர் சக்தி பாண்டியன், மாவட்ட தலைவர் உடையார், செயல் தலைவர் முருகானந்தம், மாநகர தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கட்சி நிர்வாகிகள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்