செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; 128 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருள் நகர் பகுதியில் வசிக்கும் 55 வயது பெண், அதே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 40 வயது ஆண், ஊரப்பாக்கம் கணபதி நகர் முதல் தெருவில் வசிக்கும் 65 வயது மூதாட்டி, எம்.ஜி.நகர் 5வது தெருவில் வசிக்கும் 48 வயது ஆண், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 53 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,569 ஆனது. இவர்களில் 1,142 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 40 வயது மற்றும் 53 வயது ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், மாடம்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 650 ஆனது. இவர்களில் 386 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 258 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,752 ஆனது. இவர்களில் 830 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 905 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் உயிரிழந்தனர்.