கொள்ளை வழக்கில் சிக்கிய 5 பேருக்கு கொரோனா 10 போலீசாருக்கும் தொற்று
கொள்ளை வழக்கில் சிக்கிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மும்பை,
கொள்ளை வழக்கில் சிக்கிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் அவர்களை பிடித்த 10 போலீசாருக்கும் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
மும்பை குர்லா நேரு நகர் போலீசார் சமீபத்தில் எலெக்ட்ரானிக்ஸ் கடையை உடைத்து ரூ.5½ லட்சம் பொருட்கள், பணத்தை கொள்ளையடித்த 7 கொள்ளையர்களை பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் 5 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடித்த நேரு நகர் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2 அதிகாரிகள் உள்பட 10 போலீசாருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நோய் பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் 5 பேரும் ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல நவிமும்பை, தலோஜா போலீசாரால் கைது செய்யப்பட்ட கொள்ளையனுக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலோஜா காவல்நிலைய 15 போலீசார், கொள்ளையனின் வக்கீல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தலோஜா போலீஸ்நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் காசிநாத் சவான் கூறியுள்ளார்.