சமூக இடைவெளியை அதிகரிப்பதற்காக மாதவரம் பஸ் நிலைய தற்காலிக பழக்கடைகள் இரண்டாக பிரிப்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
மாதவரம் பஸ் நிலையத்தில் இயங்கி வரும் பழக்கடைகள் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழ வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் 5-ந் தேதி கோயம்பேடு சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளுக்கு மாதவரம் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 825 கடைகளில் 239 கடைகள் மட்டுமே மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பாதியாக பிரிப்பு
இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சமூக இடைவெளியை அதிகரிப்பதற்காக மாதவரம் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த 239 கடைகள் பாதியாக பிரிக்கப்பட்டு, பஸ் நிலையத்தின் மேற் பகுதியில் பாதி கடைகளும், கீழ் பகுதியில் பாதி கடைகளும் செயல்படும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
கீழே இயங்கி வந்த 239 கடைகளில் பாதி கடைகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பஸ் நிலையத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ஆனால், மேல் பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபாரம் அதிகம் இருக்காது என்ற காரணத்தால் வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன். பஸ் நிலையத்தின் கீழே இயங்கி வரும் 239 கடைகளையும் அங்கேயே இரண்டாக பிரித்து, பாதி கடைகள் ஒரு நாளும், மீதி கடைகள் மறுநாளும் திறந்து செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பழக்கடை வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.