மயிலம் காவலர் பயிற்சி பள்ளியில் 400 பேருக்கு கபசுர குடிநீர்

மயிலம் கொல்லியங்குணத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 400 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2020-06-12 04:37 GMT
மயிலம், 

மயிலம் கொல்லியங்குணத்தில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிற்சி பெறுபவர்கள், பயிற்றுநர்கள் 400 பேருக்கு மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்தும், தொற்று பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி, டாக்டர் ஜெயஸ்ரீ, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வசந்த், பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வாசு, சுகாதார ஆய்வாளர் துரைசாமி, சித்த மருத்துவ மருந்தாளுநர் கிருபானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்