செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-11 22:30 GMT
தண்டராம்பட்டு,

செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட கள பணியாளராக பணியாற்றி வந்தவர் வசந்தா (வயது 38). இவரை கடந்த 3 மாதங்களாக கள பணியாளராக பணி செய்ய விடாமல் அவருக்கு ஊதியம் வழங்காமல் அலைகழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வசந்தா, ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் கேட்டுள்ளார். ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியின் கணவர் சீனிவாசன் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வசந்தா நேற்று செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தான் கொண்டு வந்து இருந்த மண்எண்ணெயை மேலே ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். மேலும் பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை குடிக்க முயன்றார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அங்கு அமர வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்