திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து சாவு

திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-06-11 22:45 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் ரேணுகாதேவி (வயது 32). இவரது பெற்றோர் இவருக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயம் ஆகவில்லை.

தனக்கு திருமணம் ஆகாததால் ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ரேணுகாதேவி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேணுகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்