செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 127 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கரணை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 43 வயது ஆண், 35 வயது பெண், கீழக்கரணை எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த 40 வயது ஆண், மறைமலைநகர் என்.எச்.1, கண்ணகி தெரு தெருவில் வசிக்கும் 32 வயது வாலிபர், என்.எச்.2, திருமூலர் தெருவில் வசிக்கும் 32 வயது வாலிபர், காட்டாங்கொளத்தூர் ஐஸ்வர்யம் நகரில் வசிக்கும் 11 வயது சிறுமி, பஜனை கோவில் தெருவில் வசிக்கும் 38 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் 40 வயது ஆண், காரணைப்புதுச்சேரி அருங்கால் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் 52 வயது ஆண், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்டிகை பகுதியில் வசிக்கும் 50 வயது ஆண் ஆகியோர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,444 ஆனது. இவர்களில் 903 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 75 வயது மற்றும் 66 வயதான 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், மேல் படப்பை நேதாஜி நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்த 35 இளம்பெண், மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 623 ஆனது. இவர்களில் 378 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 239 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,656 ஆனது. இவர்களில் 807 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 833 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் உயிரிழந்தனர்.