வேலம்பாளையம், பழங்கரை, பெருமாநல்லூரில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வேலம்பாளையம், பழங்கரை, பெருமாநல்லூரில் நாளை மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ. விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலம்பாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர்,குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லே அவுட்,திருமுருகன்பூண்டி, துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒருபகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.பி.நகர், அணைப்புதூர், டி.டிபி.மில் மற்றும் பழங்கரை துணை மின்நிலையத்திற்குபட்ட அவினாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம்கார்டன், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம்,கைகாட்டி புதூர் ஒருபகுதி, ரங்கநகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபீஸ், கமிட்டியார் காலனி,குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேபோல் பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம்,சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை)காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.