கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
நேற்று 259 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மராட்டியம், சென்னையில் இருந்து வந்த தலா ஒருவர் மற்றும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் என கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 292-ல் இருந்து 295 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.