நெல்லையில் பஸ் கிடைக்காமல் தவித்த பெண்ணுக்கு போலீஸ் அதிகாரி உதவி

நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் பஸ் கிடைக்காமல் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் தவித்துக் கொண்டு நின்றார்.

Update: 2020-06-10 02:14 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் பஸ் கிடைக்காமல் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் தவித்துக் கொண்டு நின்றார். இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் மைக் மூலம் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் ஜீப்பில் விரைந்து சென்றனர். அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணையும், அவரது 2 மகன்களையும் ஏற்றி அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதற்கான ஆட்டோ கட்டணத்தை துணை கமிஷனர் சரவணன் வழங்கினார். இதற்காக துணை கமிஷனருக்கும், போலீசாருக்கும் அந்த பெண் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்