புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பருவ தேர்வுகள் ரத்து
புதுவை மத்திய பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டின் இறுதி பருவம் (செமஸ்டர்) பயிலும் மாணவர்களை தவிர மற்ற முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
இவர்களுக்கு உள்மதிப்பீட்டு தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். ஏற்கனவே தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும். இதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். இறுதியாண்டு இறுதி பருவம் தேர்வின் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.