தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நிவாரணமாக ரூ.12,500 வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது
கொரோனா நிவாரணமாக ரூ.12,500 வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேராவூரணி,
கொரோனா நிவாரணமாக ரூ.12,500 வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து, சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
சிறு,குறு தொழில் முனைவோருக்கு கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். கொரோனா தொற்றை விரைந்து கட்டுப்படுத்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பேராவூரணி பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் குமாரசாமி, வேலுசாமி, ராமலிங்கம், ரெங்கசாமி, பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர்கள் சித்திரவேலு, ஜெயராஜ், காசியார், ராஜமாணிக்கம், கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்-பாபநாசம்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதேபோல் சுந்தரபெருமாள்கோவிலில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், கொற்கை கிராமத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் கோவிந்தன், சாத்தங்குடி கிராமத்தில் ஒன்றிய பொருளாளர் ராய்யப்பன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாபநாசம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காதர்உசேன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தில்லைவனம், குணசேகரன், சாமு.தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர், திருவிடைமருதூர்
மதுக்கூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாரதிமோகன் மற்றும் நிர்வாகிகள் பழனிவேலு, கலைச்செல்வி, காசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் அஞ்சல் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். ஒன்றிய தலைவர் ஜீவபாரதி தலைமை தாங்கினார்.