எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட், முக கவசம்
தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.;
திருச்சி,
தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தேர்வினை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வருகிற 11-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு இருந்தன. ஆசிரியர்களும் பணிக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்து வரும் பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் மற்றும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்பட்டன.