மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடக்கத்தில் நிலைமை கட்டுக்குள் இருந்தது. நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆகவே நீடித்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. லாஸ்பேட்டை, பிள்ளையார்குப்பம், முத்தியால்பேட்டை, ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர்கள், காவலாளிகள் என பலருக்கு கொரோனா தொற்று பரவியது. நகர் பகுதியில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து 70 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதுவை கோவிந்தசாலை, கதிர்காமம் சிவாஜி நகர், பொய்யாகுளம், வீமன் நகர், மூகாம்பிகை நகர், ஆச்சாரியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் புதுவை பிராந்திய பகுதியான மாகியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் ஆவர். நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக மொத்தம் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 75 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,274 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8,112 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 32 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது.