தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
துமகூரு அருகே தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி கொல்லி மருந்தை குடித்த வாலிபர் உயிர் இழந்தார். டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வேண்டும் என்ற அவரது வினோத ஆசையால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே கவுரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது 25). இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக தான் திருமணம் நடந்திருந்தது. தனஞ்செய் அவ்வப்போது டிக்-டாக்கில் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 6-ந் தேதி இரவு தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்கு வைத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்த தனஞ்செய், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
மேலும் அந்த வீடியோவில் தற்கொலை செய்வது தொடர்பான அனுபவத்தை தெரிந்து கொள்ள பூச்சி கொல்லி மருந்தை குடிப்பதாக அவர் பேசி இருந்தார். அந்த வீடியோவை டிக்-டாக்கில் தனஞ்செய் வெளியிட்டு இருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே தோட்டத்திற்கு சென்று வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய தனஞ்செயை மீட்டனர்.
பின்னர் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனஞ்செய் பரிதாபமாக இறந்துவிட்டார். தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் விரைந்து சென்று தனஞ்செய் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனஞ்செய் தனது மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தியது தெரியவந்தது. மேலும் தற்கொலை அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற வினோத ஆசையில் பூச்சி கொல்லி மருந்தை குடித்த தனஞ்செய் உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.