இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-06-09 00:03 GMT
திண்டுக்கல், 

அம்மையநாயக்கனூர், செம்பட்டி, நத்தம், எல்.வலையபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடைரோடு, அம்மையநாயக்கனூர், பொட்டிக்குளம், பள்ளப்பட்டி, மாவூர் டேம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், செம்பட்டி, ஆத்தூர், திண்டுக்கல் வாட்டர் ஒர்க்ஸ், சித்தையன்கோட்டை, பச்சமலையான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

இதேபோல் கீழக்கோட்டை, தாமரைப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சின்னாளப்பட்டி, கோட்டைபட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, செட்டியபட்டி, எல்லப்பட்டி, கல்லுப்பட்டி, வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், சிறுமலை, பெருமாள் கோவில்பட்டி, முருகம்பட்டி, சாதிகவுண்டன்பட்டி, சாமியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை அந்தந்த துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்