கண் டாக்டர் தோட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பை சீரமைக்க ரூ.1 கோடி நிதி
புதுச்சேரி கண் டாக்டர் தோட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 10 அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் 300 ஏழை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
புதுச்சேரி,
சேதமடைந்த இந்த குடியிருப்பை சீரமைத்து தரக்கோரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவாவிடம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சீரமைப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அந்த கட்டிடத்தில் சிவா எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அணில்குமார், இளநிலை பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.