வடவள்ளியில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்

கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளியில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.;

Update: 2020-06-08 21:54 GMT
வடவள்ளி,

கோவை மாநகர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளியில் வார்டு எண் 15, 16, 17, 18, 19, 20 ஆகிய பகுதிகளில் இருக்கும் 25 ஆயிரம் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் வடவள்ளி பகுதி செயலாளர் புதூர் செல்வராஜ், வக்கீல் மனோகரன், கருப்புசாமி, மாணிக்கவாசகம், செந்தில், அன்பு என்கிற செந்தில் பிரபு, வார்டு செயலாளர்கள் ஏ.எஸ்.பார்த்திபன், ராயப்பன், மனோகரன், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்