கொரோனா தடுப்பு கெடுபிடி காரணமாக நெல்லை-நாகர்கோவில் பஸ்சில் பயணிகள் கூட்டம் குறைந்தது

கொரோனா தடுப்பு கெடுபிடி காரணமாக நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது.

Update: 2020-06-06 23:41 GMT
நெல்லை, 

கொரோனா தடுப்பு கெடுபிடி காரணமாக நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் தற்போது பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் நெல்லை மாநகர பகுதிகள் மற்றும் தனியார் பஸ்கள் செல்லும் ஊர்களுக்கு மட்டுமே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

பயணிகள் கூட்டம் குறைந்தது

இந்த நிலையில் நெல்லையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்சில் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டே பஸ்சில் ஏற்றப்படுகிறார்கள். மேலும் அவர்கள் தங்களது ஆதார் கார்டை காட்டி படிவத்தை நிரப்பிக்கொடுத்த பின்னர்தான் பயணம் செய்யவேண்டும். இந்த கொரோனா தடுப்பு கெடுபிடி காரணமாக தற்போது நாகர்கோவில் செல்லும் பஸ்சில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

மேலும், பஸ்சில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்த பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு முக கவசம் அணியாமல் பயணிகள் பஸ்சில் பயணம் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்