திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Update: 2020-06-06 01:05 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

அதன்படி நேற்று திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரம், கால்நடை மருத்துவமனை ரோடு, போடிநாயக்கன்பட்டி, திருமலைசாமிபுரம், இந்திரா நகர், நாகல்நகர் 3-வது தெரு காளியம்மன் கோவில் அருகில், கூட்டுறவு நகர், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில், புங்கோடை, கருவூல காலனி, நந்தவனப்பட்டி வள்ளுவர் மைதானம், சக்கரபாணி தெரு, சாலையூர், கரட்டுப்பட்டி, ராயர்புரம், ரெங்கநாதபுரம், ஓடைப்பட்டி, செல்லமந்தாடி, வி.எஸ்.நகர், என்.எஸ்.நகர், கொத்தம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, துவரம்பருப்பு, மைதா, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அமைச்சர் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன், மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்