சாயல்குடி பகுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

சாயல்குடி பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2020-06-05 05:10 GMT
சாயல்குடி, 

சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், எஸ்.தரைக்குடி, ஆர்.சி.புரம், காவாகுளம், மேலக்கிடாரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்செழியன், செஞ்சடைநாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமர், பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு மற்றும் நிவாரண பொருட்களை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாயகிருஷ்ணன், பெரோஸ்பானு ஜலில், எஸ்.தரைக்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர்கள் நாகரத்தினம், சிவா, ஊராட்சி கழக செயலாளர்கள் மாரிமுத்து, நீதிவேந்தன், ஹைதர்அலி, ஆர்.சி.புரம் கிளை செயலாளர் பிரான்சிஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல நரிப்பையூர் ஊராட்சி வெள்ளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம் முகைதீன், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், கடலாடி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆப்பனுார் குருசாமி, ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏழை எளிய மக்களுக்கு காய்கறி, அரிசி போன்றவற்றை முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர் செயலாளர் சோலை, ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், நரிப்பையூர் ஊராட்சி தலைவர் நாராயணன், வேப்பமரத்துபனை கிளை செயலாளர் யோசோப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்