வங்கி ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை ; மைத்துனர் உள்பட 3 பேரிடம் விசாரணை
காதல் திருமணம் செய்த திருக்கோவிலூர் வங்கி ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மைத்துனர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 22). அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருபுவனை வங்கி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அதே வங்கியில் வேலை பார்த்து வந்த திருபுவனை பாளையத்தை சேர்ந்த காயத்ரி (20) என்பவரை ராஜேஷ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது மனைவி காயத்ரியுடன் ராஜேஷ்குமார் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். தற்போது அவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கணவர்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு காயத்திரி, குழந்தையுடன் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று திருபுவனையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அதன்பின் அவர் கணவரின் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே இருந்து விட்டார்.
அதன்பிறகு ராஜேஷ்குமார் திருபுவனைக்கு அடிக்கடி வந்து தனது மனைவி, குழந்தையை பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல் நேற்று முன்தினமும் மனைவியை பார்க்க ராஜேஷ்குமார் திருபுவனைக்கு வந்திருந்தார். அப்போது அவரும், காயத்ரியின் அண்ணன் செல்வராஜும் மது குடிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. ஆனால் இரவு முழுவதும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
திருபுவனை பாளையம் மல்லிகை நகர் பகுதியில் உள்ள சவுக்கு தோட்டத்தில் நேற்று காலை ராஜேஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காயத்ரி அலறியடித்தபடி சம்பவ இடத்துக்கு ஓடினார். அங்கு கிடந்த கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
இது பற்றி அறிந்ததும் திருபுவனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மது குடிக்க சென்ற ராஜேஸ்குமார் கொலை செய்யப்பட்டதும், அவருடன் சென்ற காயத்ரியின் அண்ணன் செல்வராஜ் தலைமறைவானதும் தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷ்குமாரை செல்வராஜ் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இதையடுத்து செல்வராஜை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இதற்கிடையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த செல்வராஜ் உள்பட 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.