வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-06-04 23:32 GMT
சீர்காழி, 

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் போகர் ரவி, இளநிலை உதவியாளர் பாஸ்கரன், வரித்தண்டலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் பாரதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 27 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, கையுறை, முக கவசம் ஆகியவற்றை வழங்கி பேசினார். பின்னர் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டியை பார்வையிட்டார். 

தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோவில் மேலவீதியில் அ.தி.மு.க. சார்பில் சாலையோர பழக்கடை வியாபாரிகள் உள்ளிட்ட வியாபாரிகள் 48 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் செல்லையன், பேரூர் செயலாளர் ரவி, கூட்டுறவு சங்க துணை தலைவர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்