பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை; கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கொரோனாவால் பள்ளிக்கூட வேலைநாட்கள் குறைந்துள்ளதாகவும், திறக்கப்படுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
கோபிசெட்டிபாளையம், நம்பியூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் கடந்த 2 ஆண்டுகளாக குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் அடைந்து வருகின்றனர். அதேபோல் தடப்பள்ளி வாய்க்காலில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பகுதி விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தண்ணீர் திறப்பு இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. இது வரலாற்றுச்சிறப்புமிக்க திட்டமாகும். இந்த அரசு விவசாயிகளின் நலனைக் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது.
கொரோனாவால் பள்ளிக்கூடங்களின் வேலை நாட்கள் 210 நாட்களிலிருந்து குறைந்துள்ளது. எனவே, எவ்வாறு பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்பட 18 பேர் கொண்ட குழு முடிவு செய்து, அதற்கான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். பள்ளிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்து உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் 3 துறைகள் இணைந்து பணியாற்ற உள்ளனர். அதில் பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய் பேரிடர் மீட்பு துறை ஆகியன இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளது.
தமிழக முதல்-அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வில் வருகிற 11-ந்தேதி அரசு பள்ளி விடுதிகள், தனியார் பள்ளி விடுதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களை பொறுத்தவரை மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 12 ஆயிரத்து 816 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, இதுவே முதல் முறை ஆகும். தேர்வு தொடங்கும் அன்று மாணவர்களுக்கு வினியோகம் செய்வதற்காக 43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக உள்ளது.
அதேபோல் மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகளில் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பின்பும் ஒவ்வொரு நாளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். இதற்காக தனி மேற்பார்வையாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணிகளை நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். எங்கள் உயிரைக் காட்டிலும் மாணவர்கள் உயிர் நலனே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் நிச்சயமாக தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும். தேர்வு எழுத மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களில் சிலர் தங்களுக்கு ஆன்-லைன் மூலமாக படிப்பதற்கு செல்போன் வசதியில்லை என கூறியுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வை எழுத கல்வி டி.வி சேனல், மத்திய அரசு டி.வி சேனல் மற்றும் தனியார் டி.வி சேனல்கள் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளலாம். மேலும், கியூ-ஆர் கோடு மூலம் எந்த செல்போனிலும் டவுன்லோடு செய்தும் படிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் அருகில் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் குடிநீர்தொட்டி அமைத்தல், பிள்ளையார் கோவில் துறையில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலை சீரமைத்தல் ஆகிய குடிமராமத்து பணி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் தமிழ்பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.