புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெறுவது எப்போது? அதிகாரி தகவல்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெறுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2020-06-04 05:32 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெறுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மூடி கிடக்கும் ரெயில் நிலையம்

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் புதுக்கோட்டை ரெயில் நிலையம் மூடிக் கிடக்கிறது. தற்போது வரை பயணிகளுக்கான பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் ரெயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் மையத்தில் வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டண தொகை திரும்ப வழங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தெற்கு ரெயில்வேயில் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் குறிப்பிட்ட தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டண தொகை தேதி வாரியாக திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளி

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் இதற்காக தனியாக ஒரு கவுண்ட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதில் முன்பதிவு பயணிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கட்டண தொகை திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்மொழியாக தான் இதனை ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாளை இல்லையென்றால் வருகிற 8-ந் தேதி முதல் டிக்கெட் கட்டணம் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்