வாணியவல்லம் கண்மாய் புனரமைக்கும் பணி
வாணியவல்லம் கண்மாய் புனரமைக்கும் பணி ரூ.80 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனில் பொதுப்பணித்துறையின் கீழ் 7 கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக வாணியவல்லம் கண்மாய் ரூ.80 லட்சம் செலவில் மராமத்து செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு நயினார்கோவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். அனைவரையும் பரமக்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் லதா வரவேற்றார். இதில் வாதவனேரி கூட்டுறவு சங்க தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் சேதுராமன், வாணியவல்லம் ஊராட்சி தலைவர் நாகநாதன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி, நயினார்கோவில் ராஜ்குமார், வாணியவல்லம் கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.