உருதுமொழியில் மாணவர்களுக்கான காணொலிகள் தயாரிப்பு
தமிழகத்திலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரியில் அருங்காட்சியகத்துடன் இணைந்து உருதுமொழியில் மாணவர்களுக்கான காணொலிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் வாழும் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் 42 உருது தொடக்கப்பள்ளிகள், 12 நடுநிலைப்பள்ளிகள், 4 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மற்ற மொழிகளில் கிடைக்கும் பாடம் சார்ந்த காணொலிக்காட்சிகள் போல் உருது மொழியில் காணொலிகள் இல்லை.
இவர்களுக்காக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலைஅமைப்பினர், தமிழகத்திலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்துடன் இணைந்து அகழ்வாய்விலும், மேற்கள அகழ்வாய்விலும் கிடைத்த உண்மை பொருட்களை கொண்டு உருது பள்ளி மாணவர்களின் வரலாற்று பாடங்களில் உள்ளவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உருது ஆசிரியர்களை கொண்டு காணொலிகளாக தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 6-ம் வகுப்பு சமூக அறிவியலில் வரும், வடஇந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும் என்ற பாடத்தில் உள்ள தமிழகத்தின் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் பற்றிய காணொலிகள் எடுக்கப்பட்டன. கங்கலேரியில் உள்ள கல்திட்டைகள் கொண்டு விளக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே குந்தாரப்பள்ளி அருகே உள்ள பெரிய குத்துக்கல் (நினைவுக்கல்) களத்திற்கு சென்று காணொலி எடுக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் நடுகற்கள் பற்றிய காணொலி எடுக்கப்பட்டது.
நடுகல்லின் முக்கியத்துவம் பற்றியும், நடுகற்களின் வகை பற்றியும் அருங்காட்சியக காப்பாட்சியர் விளக்க, அதை அப்படியே உருது மொழியில் ஆசிரியைகள் கூறும்படி காணொலி எடுக்கப்பட்டது. நாம் கற்ற, கற்பித்த கல்வியை இன்று பள்ளி செல்லா நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எளிதில் கற்க ஏதுவாக தங்கள் பெற்றோரின் தொலைபேசிக்கு பாடங்களை கொண்டு சேர்த்தல் மிக எளிதாகும். இதை பெற்றோர்கள் மேற்பார்வையில் எளிதாக்கும் வகையில் செயல்படுத்தப்படும். யூ-டியூப்பில் சென்று KHRDT MUSEUM என டைப்செய்தால் இந்த காணொலிகளை காணலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை துணைச்செயலாளர்கள் சாதிக்உசேன், பிரியதர்ஷனி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியைகள் நூர்ஜஹான் பேகம், பஷீராபேகம், ரியா சுன்னிசா, உசேன் பானு, நிசார் அஹமத், யாரப்பாஷா, முஹமத்சாலியா ஆகியோரை கொண்டு காணொலிகள் தயாரிக்கப்பட்டன.