மீஞ்சூர் அருகே பரிதாபம் செங்கல் சூளையில் கற்கள் சரிந்து 2 வடமாநில பெண்கள் பலி

மீஞ்சூர் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் லாரியில் செங்கற்களை ஏற்றும்போது சரிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 வடமாநில பெண்கள் உயிரிழந்தனர்.;

Update:2020-06-04 05:34 IST
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே வழுதிகைமேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று ஒடிசா மாநிலத்தை சார்ந்த மதனா (வயது 18), பரிமளா (22) ஆகிய இரு இளம்பெண்கள் செங்கல் சூளையில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென செங்கற்கள் சரிந்து விழுந்ததில், 2 பெண்களும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வருவாய்துறை கொடுத்த தகவலின்படி மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு செங்கல் சூளையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க முறையிட்டனர்.

உடனே அதிகாரிகள், வெளிமாநிலத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

பின்னர் செங்கற்கள் இடையே சிக்கி பலியான மதனா, பரிமளா ஆகிய இரண்டு இளம்பெண்களின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து மீஞ்சூர் போலீசார் செங்கள்சூளை உரிமையாளர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்