செங்கல்பட்டு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா; 61 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-06-03 23:40 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிக்கும் 60 வயது முதியவர், காரணைப்புதுச்சேரி ஊராட்சி விநாயகபுரம் 10வது தெருவில் வசிக்கும் 54 வயது ஆண், மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள வள்ளலார் நகர், கண்ணப்ப முதலியார் தெருவில் வசிக்கும் 31 வயது ஆண், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள மப்பேடு, புதூர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், கொளப்பாக்கம் அழகேசன் நகர் மூகாம்பிகை தெருவில் வசிக்கும் 38 வயது பெண், ஊனமாஞ்சேரி ஊராட்சி வசந்தாபுரம் பகுதியில் வசிக்கும் 59 வயது ஆண், மறைமலைநகர் நகராட்சி நக்கீரர் தெருவில் வசிக்கும் 55 வயது ஆண் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அப்பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,370 ஆனது. இவர்களில் 671 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 48 வயது உடைய ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துடன் 13 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த 26 வயது வாலிபர், காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எழுச்சூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 453 ஆனது. இவர்களில் 267 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 3 பேர் உயிரிந்ததனர். 183 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,087 ஆனது. இவர்களில் 630 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் உயிரிந்ததனர். 446 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்