உலக சுற்றுச்சூழல் தினம்:ஆன்லைன் மூலமாக பல்வேறு போட்டிகள் ; நாளை நடக்கிறது
புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக பல்லுயிர் பாதுகாப்பு-இயற்கைக்கான நேரம் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்துடன் இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளை நடத்தி உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் ஆன்லைன் மூலமாக கருத்தரங்கம், கவிதை எழுதுதல் (தமிழ், ஆங்கிலம்), புகைப்படம் எடுத்தல் போட்டி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி 2019-2020-ம்ஆண்டிற்கான அறிக்கையை வெளியிடுகிறார். ஆர்வமுள்ளவர்கள் போட்டியின் நெறிமுறைகளை தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்தி கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.