பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழசெங்கல்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை.;

Update: 2020-06-03 06:46 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழசெங்கல்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மனைவி கல்பனா(வயது 32). 

இவர் கடந்த 30-ந் தேதி மாலை தனது வீட்டின் முன்பு உள்ள குடிதண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள ராஜேந்திரன் மகன் பிரபாகரன்(26) என்பவர் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கேட்டை உடைத்துள்ளார். இதை கல்பனா தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், கல்பனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். 

இதுகுறித்து கல்பனா கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்