கடன் தொல்லையால் அ.தி.மு.க. கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை
அவினாசி அருகே கடன் தொல்லையால் அ.தி.மு.க. கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி குளத்துபாளையத்தை சேர்ந்தவர் ஏ.கே.செல்வராஜ் (வயது 52). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர் பழங்கரை ஊராட்சி மன்ற 9-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார்.
இவருடைய மனைவி சுமதி (44). இவர்களுக்கு நாகப்பிரியா (28),நாகநந்தினி (24) ஆகிய 2 மகள்களும், நாகமணிகண்டன் (18) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.
தற்கொலை
செல்வராஜிக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியாவில் வீட்டில் மின்விசிறியில் செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடன் தொல்லையால் அ.தி.மு.க. கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.