கொத்தவால்சாவடியில் பரிதாபம்: தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
பெரம்பூர்,
சென்னை கொத்தவால்சாவடி சின்னத்தம்பி தெருவைச் சேர்ந்தவர் உசேன்(வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
கடந்த 26-ந் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடீரென தண்ணீர் வாளிக்குள் தலை குப்புற விழுந்து விட்டது. சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாமல் வீட்டில் இருந்தவர்கள் அங்கும்இங்குமாக தேடி அலைந்தனர்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தண்ணீர் வாளிக்குள் குழந்தை தலைகுப்புற விழுந்து மூச்சுத்திணறி தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி கொத்தவால்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.