முத்தியால்பேட்டை பகுதியில் இன்று மின்சார நிறுத்தம்

புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின்நிலையத்தில் வருடாந்திர மின்உபகரண சோதனை பணிகள் நடைபெற உள்ளது.

Update: 2020-06-02 23:59 GMT

புதுச்சேரி,

இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. அதன் விவரம் வருமாறு:-

புஸ்சி வீதிக்கு வடக்கு, முத்தியால்பேட்டைக்கு தெற்கு, கடற்கரை சாலை, சத்தியா நகர் மற்றும் சக்தி நகருக்கு கிழக்கு, முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுகுப்பம், வைத்திக்குப்பம், ஒயிட் டவுன், கோவிந்த சாலை, பிருந்தாவானம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரம், லெனின் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்