புயல் கரையை கடக்கும் போது என்ன செய்யலாம், செய்ய கூடாது மும்பை மாநகராட்சி விளக்கம்

புயல் கரையை கடக்கும் போது என்ன செய்யலாம், செய்ய கூடாது என மும்பை மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு.;

Update: 2020-06-02 23:48 GMT
மும்பை,

* முக்கியமான ஆவணங்கள், நகைகளை பிளாஸ்டிக் பைகளில் மூடி வைக்க வேண்டும்.

* இன்வெர்டடர், ஜெனரேட்டர் போன்றவை சரியாக இயங்குகிறதா என்பதை பார்த்து கொள்ளவும்.

* அரசின் அறிவுறுத்தல்களை டி.வி, ரேடியோ மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளவும்

* அவசர காலத்துக்கு தேவையான சாதனங்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

* ஜன்னல் ஓரம் செல்ல வேண்டாம். காற்றின் அழுத்தத்தை சமநிலையாக்க வீட்டின் ஒரு பகுதி ஜன்னல்களை திறந்தும், மற்ற பகுதி ஜன்னல்களை மூடியும் வைக்க ேவண்டும்.

* அறையின் மையப்பகுதியில் இருக்கவும்.

* அசாம்விதங்கள் நேரும் போது கனமான நாற்காலிகள் அல்லது மேஜைகளின் கீழ் சென்று கொள்ள வேண்டும்.

* கைகளால் முகம், கழுத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

* அத்தியாவசிய தேவையில்லாத மற்ற மின்சாதனங்களின் மின் இணைப்பை துண்டித்துவிடவும்.

* தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ளவும்.

* புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, முதல் உதவி செய்யவும்.

* சமையல் எரிவாயு, மின் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணித்து கொள்ளவும்.

* அவசர உதவிகளுக்கு மாநகராட்சி உதவி எண் 1916- ஐ தொடர்பு கொள்ளவும்.

* வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம்.

* வாகனங்களில் வெளியே செல்ல கூடாது.

* சேதமடைந்த கட்டிடங்கள் அருகில் செல்ல வேண்டாம்.

* பெரிய அரங்குகள், வணிக வளாகங்களுக்கு கீழ் செல்ல வேண்டாம்.

* காயமடைந்தவர்களை தேவையில்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டாம்

* வீட்டில் எண்ணெய் மற்றும் எளிதில் பற்றி எரியும் பொருட்களை கொட்ட வேண்டாம். அப்படி கொட்டினால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்